×

கரூர் மாவட்டத்தில் 169.20 மிமீ மழை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி

கரூர், மே 10: கரூர் மாவட்டம் முழுதும் நேற்றுமுன்தினம் 169.20மிமீ மழை பொழிந்துள்ளதால், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக கரூர் மாவட்டத்தில் மழை இல்லை. ஆனால், மூன்று மாதமாக சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு அரை மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால், கரூரில் சீதோதனைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் இரவு 12 மணியளவில் கரூர் மாவட்டம் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நல்ல மழை பெய்தது. இந்த மழை காரணமாக, வாட்டி வதக்கிய வெயிலில் இருந்து ஓரளவு மக்கள் தப்பினர்.

கரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் பெய்த மழையளவு விவரம் : கரூர் 24.4மிமீ, அரவக்குறிச்சி 19.6மிமீ, அணைப்பாளையம் 13மிமீ, க.பரமத்தி 27.2மிமீ, குளித்தலை 23மிமீ, தோகைமலை 2மிமீ, கிருஷ்ணராயபுரம் 16.8மிமீ, மாயனூர் 17மிமீ, பஞ்சப்பட்டி 3மிமீ, பாலவிடுதி 4.2மிமீ, மயிலம்பட்டி 19மிமீ என மாவட்டம் முழுதும் ஒரே நாளில் 169.2மிமீ மழை பதிவாகியுள்ளது. இதன் மொத்த சராசரி மழையளவு 14.10மிமீ.அரவக்குறிச்சி:  அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் .நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு திடீரென வானில் கருமேகம் சூழ்ந்து இடி, மின்னலுடன் 3 மணி நேரம் மழை பெய்தது. மேலும் விடிய, விடிய மிதமான மழை பெய்து கொண்டிருந்து. இதனால் வெப்பமான வானிலை மாறி குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. அரவக்குறிச்சி ஒன்றியம் பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ஆழ்குழாய் கிணறுகளில் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது.

Tags : district ,Karur ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்