வத்திராயிருப்பு அருகே வறண்டு வரும் பிளவக்கல் பெரியாறு அணை

வத்திராயிருப்பு, மே 10: வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பொியாறு அணைக்கு ெதாடர்ந்து தண்ணீர் வரத்தின்றி வறண்டு குட்டை போல் காணப்படுகிறது. வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் என்ற இடத்தில் பொியாறு, கோவிலாறு அணைகள் உள்ளன. இதில் கோவிலாறு அணை கடந்த சில மாதங்களாக தண்ணீாின்றி வறண்ட நிலையில் உள்ளன. பொியாறு அணையின் மொத்த உயரம் 47.54 அடியாகும். ஆனால் தற்போது 12 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. பருவமழைகள் தொடர்ந்து ஏமாற்றி வருவதால் போதிய அளவில் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை.

அணையில் தற்போது தண்ணீர் மிகமிக குறைந்த அளவே உள்ளதால் குட்டையில் கிடப்பது போன்ற குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் சுற்றுலா வரக்கூடிய பயணிகள் தண்ணீர் குறைந்த அளவே உள்ளதால் அணையின் அழகை முழுமையான ரசிக்கமுடியாத நிலை உள்ளது. அணையில் தண்ணீர் குட்டையில் உள்ளது போல் காணப்படுவதால் வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு அதிகமாக தண்ணீர் அருந்த வந்து செல்கின்றன. தற்போது அணையில் தண்ணீர் குறைந்த அளவே உள்ளதால் சுற்றுலா வரும் பயணிகள் அணையின் கீழ் பகுதிக்கு இறங்கி சுற்றிப்பார்த்து வருகின்றனர்.

Tags : Pallakal Periyar Dam ,householder ,
× RELATED வத்திராயிருப்பு அருகே 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்