×

ஆழ்குழாய் பழுதால் தண்ணீர் பற்றாக்குறை துணைமுதல்வர் தொகுதியில் துயரம்

போடி, மே 10: துணைமுதல்வர் தொகுதியில் ஆழ்குழாய் பழுதுதானதால் 5 ஆண்டுகளாக செயல்படாமல் தரை நிலைத்தொட்டி உள்ளது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். போடியிலுள்ள 33 வார்டுகளுக்கு நகராட்சியிலிருந்து குரங்கணி, கொட்டக்குடி, சாம்பலாறு தடுப்பணை ஊற்றிலிருந்து குடிநீரை சேமித்து து பரமசிவன் மலை அடிவாரத்திலுள்ள பவர் ஹவுஸில் நிரப்புகின்றனர். அங்கிருந்து சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் தவிர்த்து ஒவ்வொரு வார்டுகளிலும் ஒவ்வொரு தெருக்களிலும் பிறத்தேவைகளுக்காக ஆழ்குழாயும், தரை நிலைத்தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஓரளவிற்கு குடிநீர் பற்றாகுறை இல்லாமல் பொதுமக்கள் தப்பித்து வந்தனர்.

இந்த நிலையில், போடி 29வது வார்டு பகுதியிள்ள கோட்டை கருப்பசாமி கோயில் பகுதியில் பல்வேறு தெருக்கள் உள்ளன. ஒரு பகுதியில் உள்ள ஆழ்குழாயில் மோட்டார் 5 ஆண்டுகளாக பழுதாகி கிடக்கிறது. இதுகுறித்து நகராட்சியில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த ஆழ்குழாயும் தரை நிலைத்தொட்டியும் செயல்பாடும் இல்லாமல் இருப்பதால் தண்ணீர் கிடைக்காமல் அடுத்த தெருவிற்கு பொதுமக்கள் அலைந்து திரிகின்றனர். துணைமுதல்வர் தொகுதியிலேயே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, போடி நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : substrate constituency ,
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு