×

வீரபாண்டி திருவிழா போடி பஸ்நிலையத்தில் பந்தல் சிறிதாக அமைப்பு பயணிகள் அவதி

போடி, மே 10: தேனி அருகிலுள்ள வீரபாண்டி கோயில் திருவிழா துவங்கிய நிலையில் போடி பஸ்நிலையத்தில் சிறிய நிழற்பந்தல் அமைத்துள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழா செவ்வாய்கிழமை துவங்கியுள்ளது. இந்த திருவிழாவிற்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதற்காக போடி பஸ்நிலையத்தில் வழக்கமாக எப்போதும் சிறப்பு பஸ்கள் நிறுத்தும் பகுதியில் நீண்ட நிழற்பந்தல்கள் அமைப்பது வழக்கம். போடி சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்தும், அருகிலுள்ள கேரளா மாநிலத்திலுள்ளவர்களும், குரங்கணி மலைக்கிராம மக்களும் 8 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அதிகளவில் கலந்து கொள்வார்கள்.

ஏற்கனவே அக்னி நட்சத்திரம் வெயில் மண்டையை பிளந்து வரும் நிலையில் போடி பஸ்நிலையத்தில் பந்தல் சிறியதாக அமைத்திருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நகராட்சியும், அரசு போக்குவரத்து கழகமும் இணைந்து நிழற்தருவதற்கு நீளமாக பந்தல் அமைக்காமல் சிறியதாக அமைத்திருப்பது பொதுமக்களிடையே ெகாந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நகராட்சியிலிருந்து போடி பஸ்நிலையத்தில் இதுவரை பயணிகளுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை. பஸ்ஸ்டாண்ட் வணிக வளாக கடைகளாக கட்டி வருமானத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.  மாவட்டத்தின் மிகப்பெரிய கோயில் திருவிழா நேரத்தில், பந்தலை கூட பெரிதாக அமைக்காமல் அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்றனர்.

Tags : Pandey ,festival ,Veerapandi ,bus stand ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...