×

வைகோ இன்று பிரசாரம்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (10ம் தேதி) தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று மாலை 3.30 மணியளவில் வல்லநாட்டில் பிரசாரம் துவங்கும் வைகோ, தெய்வச்செயல்புரம், வாகைகுளம், புதுக்கோட்டை, மேல தட்டப்பாறை, புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் வழியாக ஒட்டநத்தத்தில் நிறைவு செய்கிறார் என தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் புதுக்கோட்டை செல்வம் தெரிவித்துள்ளார்.

Tags : Vaiko ,campaign ,
× RELATED மலர்ந்திருக்கும் இந்தச் சித்திரை,...