×

வாசுதேவநல்லூரில் இன்று மின்தடை

சிவகிரி, மே 10:  வாசுதேவநல்லூர் பகுதியில் இன்று (10ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கடையநல்லூர் மின்கோட்ட செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாரணபுரம் துணை மின்நிலையத்தில் இன்று (10ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெற்கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், உள்ளார், வெள்ளானைக்கோட்டை மற்றும் தாருகாபுரம் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Vasudevanallur ,
× RELATED வாசுதேவநல்லூரில் மமக நிர்வாகிகள் தேர்வு