வெள்ளிகுளத்தில் காயமடைந்த மயில் மீட்பு

கடையம், மே 10:  கடையம்  அருகே வெள்ளிகுளத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவருக்கு பாப்பான்குளம்  செல்லும் வழியில் தோட்டம் உள்ளது. இவரது மகன் சரவணன், நேற்று காலை தோட்டத்துக்கு சென்றபோது வாழை பயிரிடப்பட்ட பகுதியில் மயில் ஒன்று அகவி  கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபோது நடக்க முடியாமல் கிடந்தது.  இதுகுறித்து அவர் கடையம் வனச்சரகரத்திற்கு தகவல் கொடுத்தார். வனச்சரகர் நெல்லை நாயகம் உத்தரவுப்படி கடையம் வனக்காப்பாளர்  பூல்பாண்டியன் மற்றும் வேட்டைதடுப்பு காவலர் மனோஜ், சம்பவ  இடத்திற்கு சென்றனர். மயிலுக்கு காயம் இருந்ததால் நடக்க முடியாமல் அவதிபட்டதும், ஆண் மயில் எனவும் தெரியவந்தது. இதையடுத்து மயிலை மீட்டு  வனத்துறையினர் கால்நடை மருத்துவமனைக்கு சென்று  சிகிச்சையளித்து பின்னர் வனப்பகுதியில் விட்டனர்.

Tags : Peacock ,
× RELATED கடமலை மயிலையில் குடிமகன்கள் தொல்லை