×

ரோஸ்மியாபுரத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதால் விவசாய ‘மின்சப்ளை கட்’

பணகுடி, மே 10:  ரோஸ்மியாபுரத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதால் விவசாயத்திற்கு வழங்கப்படும் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம், மேற்கு பகுதி கோலம்பாறையில் விளை நிலங்களில் விவசாயிகள் வாழை, கேந்திப்பூ, தென்னை, கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் விவசாய பயன்பாட்டிற்காக 20க்கும் மேற்பட்டோருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் போர்கள் மற்றும் கிணறுகளில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்து பாசனத்திற்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மின் விநியோகம் தடைபட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், டிரான்ஸ்பார்மர் பழுதால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. மின் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை, என்றனர். தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பாசனத்திற்கு தண்ணீரின்றி பயிர்கள் வாடும் நிலையில் உள்ளது. எனவே மின் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு டிரான்ஸ்பார்மர் பழுைத நீக்கி மின் விநியோகத்தை சீராக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.

Tags : transformation ,farm ,
× RELATED கேரளாவில் வேகமாக பரவி வரும்...