×

கண்டமாகி கிடக்கும் காளணம்பட்டி சாலை

வேடசந்தூர், மே 10: வேடசந்தூர் காளணம்பட்டி சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடப்பதால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வேடசந்தூரில் இருந்து காளணம்பட்டி, டொக்குவீரன்பட்டி, நத்தப்பட்டி, குஞ்சுவீரன்பட்டி, தேவநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, நாகையகோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சாலை செல்கிறது. இதில் காளண்பட்டி ரோட்டில் உள்ள வேப்பமரத்து பஸ்ஸ்டாப்பில் இருந்து சுமார் 9 கிமீ சாலை பல ஆண்டுகளாக முழுமையாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றன. வேடசந்தூர், வடமதுரை பகுதிகளில் சிறிய தெருவில் துவங்கி பெரிய சாலைகள் வரை சீரமைத்து விட்டனர். ஆனால் காளணம்பட்டி ரோட்டை மட்டும் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

இதனால் வாகனங்கள் விபத்திற்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக டூவீலர்களில் வருவோர் தினமும் இரவுநேரங்களில் போதிய விளக்கு வெளிச்சம் இல்லாமல் தடுமாறி கீழே விழுந்து காயமுறுகின்றனர். இச்சாலையை சீரமைக்க கோரி பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் விரைவில் இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட வேண்டியதிருக்கும் என வாகனஓட்டிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kandanampatti ,road ,continent ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...