×

நெல்லை பிஎஸ்என்எல் புதிய பொதுமேலாளர் சஜிகுமார் பொறுப்பேற்பு

நெல்லை, மே 10:  நெல்லை பிஎஸ்என்எல் பொதுமேலாளராக பணியாற்றிய முருகானந்தம் மாற்றப்பட்டு நெல்லை மாவட்ட புதிய பொது மேலாளராக சஜிகுமார் பொறுப்பேற்றார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ப்ரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு வினாடி பிளான் 106, நிமிட பிளான் 107 மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.   பிளான் வவுச்சர் வேலிடிட்டி 180 நாட்களுக்கு  வழங்கப்படுகிறது.

இதில் அன்லிமிடெட் கால்கள் அனைத்து நெட்வொர்க்கிற்கும் மற்றும்  20 எஸ்.எம்.எஸ்  24 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் 186, 429, 485, 666, 1699  பிளான் வவுச்சர்களுக்கு 1-05-2019 முதல் 30-06-2019 வரை  அனைத்து நெட்வொர்க்கிற்கும்  அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினசரி கூடுதலாக 2.21 ஜி.பி டேட்டா  வழங்கப்படுகிறது.    

பிஎஸ்என்எல் மறு இணைப்புகள், புதிய தரைவழி, பிராட்பேண்ட், பாரத் ஃபைபர் அதிவேக இண்டர்நெட் (எப்.டி.டி.எச்) இணைப்புகள் மற்றும் 3ஜி செல்போன் இணைப்புகள், எம்.என்.பி இணைப்புகள் (நம்பரை வேறு நெட்வொர்க்கிலிருந்து பி.எஸ்.என்.எல்லுக்கு மாற்றிக்கொள்வது) ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம். மற்றும் நாட்பட்ட பில்லிங் சம்பந்தப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யலாம். இவ்வாறு சஜிகுமார் தெரிவித்துள்ளார்.

Tags : Nellai BSNL ,general manager ,
× RELATED திருத்தணி ரயில் நிலையம் ரூ.10 கோடி...