×

தாழையூத்து அருகே தாமிரபரணி ஆற்றில் கிடைத்த நடராஜர் சிலை

தாழையூத்து, மே 10: தாழையூத்து அருகில் தாமிரபரணியில் பழமையான நடராஜர் சிலை கிடைத்தது. தாழையூத்து அருகேயுள்ள ராஜவல்லிபுரம் கிராமம், செப்பறை தாமிரபரணி ஆற்றில் நேற்று முன்தினம் சுற்றுலா வந்த பயணிகள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது பாளை மணக்காடு கிராமத்தை சேர்ந்த அடைக்கலம் மகன் மகேஷ் என்பவரது கைகளில் சுவாமி சிலை கிடைத்துள்ளது. அது பழமையான நடராஜர் சிலை என்பது தெரிய வந்தது. இதனை மகேஷ் செப்பறை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

கோயில் நிர்வாகத்தினர் வருவாய் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சிலையினை பார்வையிட்ட அதிகாரிகள் நடராஜர் சிலை 17செமீ உயரமும் 14 செ.மீ. அகலமும் உடையது என்று தெரிவித்தனர். மேலும் சிலையினை கிராம உதவியாளர், ராஜவல்லிபுரம் வருவாய் ஆய்வாளர் நெல்லை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். தாமிரபரணி ஆற்றில் கிடைத்த நடராஜர் சிலையின் தன்மை குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.

Tags : river ,Thamiraparani ,Fort ,
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...