×

சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் போலீசாருக்கு தெரிவிக்காமல் கொண்டுவந்ததால் பரபரப்பு ஆந்திராவுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளி மர்மச்சாவு

திருப்பத்தூர், மே 10: திருப்பத்தூரில் இருந்து ஆந்திராவுக்கு வேலைக்கு சென்றவர் மர்மமான முறையில் இறந்ததாக கூறி சொந்த ஊருக்கு கொண்டு வந்த அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆந்திர மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் சடலம் கொண்டு வந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி கிராமம் புதுப்பாளையம் வட்டத்தை சேர்ந்தவர் சண்முகம்(40), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் மின் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் அவர் பணியின்போது இறந்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு டவர் அமைக்கும் உரிமையாளர் தகவல் தெரிவித்தாராம். இதனால் குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை ஆந்திர மாநில பதிவெண் கொண்ட தனியார் ஜீப்பில் சண்முகத்தின் சடலம் கொடுமாம்பள்ளி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும், சடலத்துடன் 2 பேர் வந்தனர். அப்போது சண்முகம் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ₹30 ஆயிரம் கொண்டு வந்து கொடுத்தனர்.
ஆனால் அதை வாங்க மறுத்த உறவினர்கள், ‘ஏன் ஆந்திர போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமலும், சடலத்தை பிரேத பரிசோதனை செய்யாமலும் கொண்டு வந்தீர்கள். எனவே, அவரது சண்முகம் சாவில் மர்மம் உள்ளது என கூறி சடலத்தை வாங்க மறுத்து ஜீப்ைப முற்றுகையிட்டனர்'. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த திருப்பத்தூர் தாலுகா போலீசாரிடம், உறவினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து சம்பவம் நடந்த இடம் ஆந்திர மாநிலம் என்பதால், போலீசார், ஆந்திர மாநிலம் கர்னூல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டால் தான் சண்முகம் எப்படி இறந்தார் என்பது குறித்து தெரியவரும் என்றனர். தொடர்ந்து, போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : sorcerer ,relatives ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...