×

மண்ணில் மறைத்து வைத்திருந்த செல்போன் பேட்டரி சிக்கியது புகார் செய்ய முடியாமல் சிறை நிர்வாகம் திணறல்

வேலூர், மே 10: வேலூர் மத்திய சிறையில் மண்ணில் மறைத்து வைத்திருந்த செல்போன் பேட்டரியை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால், புகார் செய்ய முடியாமல் சிறை நிர்வாகம் திணறி வருகிறது. வேலூர் மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கைதிகளுக்கு தடையின்றி கிடைக்கிறது. செல்போன் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் சிறையில் 2 இடங்களில் ஜாமர் கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செல்போன் பயன்பாடு குறையவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மத்திய சிறையின் 3வது பிளாக் அருகே கண்காணிப்பு கோபுரத்தின் கீழ் பயன்பாடில்லாத கழிவறை அருகே மண்ணில் புதைத்திருந்த செல்போன் பேட்டரியை போலீசார் கண்டுபிடித்தனர். அதனை பறிமுதல் செய்து பேட்டரியை புதைத்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபரின் பெயர் இல்லாமல், பொதுவாக புகார் கொடுத்தால் வழக்குப்பதிவு செய்வதில்லை என போலீசார் தெரிவித்துவிட்டதால் சிறைத்துறையினர் புகார் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

Tags : shutdown ,
× RELATED ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பஞ்சாபில்...