×

வேலூர்) அனுமதியின்றி எருதுவிடும் விழா அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர் அணைக்கட்டு அடுத்த பொய்கைமோட்டூரில்

(அணைக்கட்டு, மே 10: அணைக்கட்டு அடுத்த பொய்கை மோட்டூரில் அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்த முயற்சி செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் விழாவை வருவாய்த் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முதல் பல கிராமங்களில் அரசு அனுமதியுடன் காளை, எருதுவிடும் விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால் வேலூர் மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் இருந்து எருதுவிடும் விழாக்கள் நடத்த தடை விதிக்கபட்டது. தற்போது மக்களவை தேர்தல் முடிந்தும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..

இந்நிலையில் அணைக்கட்டு அடுத்த பொய்கை மோட்டூரில் நேற்று எருதுவிடும் விழா நடத்த கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த தகவல் சமூக வலை தலங்களில் பரவியது. எருது விடும் விழாவுக்கு வருவாய், காவல், கால்நடைதுறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதற்கிடையில் இளைஞர்கள், பொதுமக்கள் நேற்று காலையில் விழாவை கண்டுகளிக்க கிராமத்திற்கு வர தொடங்கினர். தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் விரைந்து வந்து வெளியூர்களில் இருந்து வந்த பொதுமக்களை திருப்பி அனுப்பினர்.

தொடர்ந்து, விஏஓ அனுசுயா மற்றும் வருவாய் துறையினர் அனுமதியின்றி விழா நடத்த கூடாது மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
இதையடுத்து விழாவுக்கான ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு, விழா நடக்கும் தெருவில் இருபுறமும் கட்டியிருந்த தடுப்பு கம்புகள், ஒலி பெருக்கிகள் அகற்றப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Vellore ,ceremony ,bungalow ,
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...