×

திருப்போரூர் அருகே 4 சவரன் கொள்ளை

திருப்போரூர்: திருப்போரூரை அடுத்துள்ள ஆலத்தூர் கிராமம் கெங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமார் (55). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி ராணி, மகள் செல்வமேரி, மாமியார் மின்னலா ஆகியோருடன் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணியளவில் மொட்டை மாடியில் மர்ம நபர்கள் உலவுவது தெரிய வந்தது. இதையடுத்து கண் விழித்துப் பார்த்த ராணி தனது கழுத்தில் இருந்த 4 சவரன் தாலி செயின் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டு கூச்சல் போட்டார். தூங்கிக் கொண்டிருந்த மற்றவர்கள் எழுந்து விரட்டிப் பிடிப்பதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து திருப்போரூர் போலீசில் குமார் கொடுத்த புகாரின் பேரில் திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : surrender robbery ,Tiruppuram ,
× RELATED ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு