×

பகுதி நேரம் இயங்கும் சித்த மருத்துவமனை: நோயாளிகள் அவதி

திருக்கழுக்குன்றம்: மத்திய அரசின் தேசிய சித்த மருத்துவமனை    புதிதாக கடந்தாண்டு முதல் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் பை-பாஸ் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த சித்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது முதல் பொதுமக்கள் அதிகளவு இங்கு வந்து தங்களது உடலை பரிசோதித்து சித்த மருத்துவ முறையிலான சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்க வேண்டிய இந்த மருத்துவமனை மதியம் வரை மட்டுமே இயங்குவதால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். இது குறித்து நோயாளிகள் கூறுகையில், ‘இந்த சித்த மருத்துவமனை பொது மக்களின் பல ஆண்டு கோரிக்கைக்குப் பிறகு தற்போது கடந்தாண்டு முதல் மத்திய அரசால் இப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து பயன் அடைகிறோம். சிகிச்சைக்காக காலையிலேயே வந்து கால்கடுக்க காத்திருந்தாலும் சிகிச்சையளிக்க வரும் டாக்டர் மற்றும் ஊழியர்கள் தாமதமாக வருகின்றனர். அது மட்டுமின்றி மாலை வரை இயங்க வேண்டிய மருத்துவமனை நோயாளிகள் எவ்வளவுப் பேர் காத்துக் கிடந்தாலும், ‘நாளைக்கு வாங்க’ என்று கூறிவிட்டு மதியமே டாக்டர் மற்றும் ஊழியர்கள் சென்று விடுகின்றனர். எனவே, மருத்துவமனை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்க அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Siddha Hospital ,
× RELATED சென்னை அருகே சித்த மருத்துவமனையில்...