×

ஏரிவாக்கம் முத்துமாரியம்மன் கோயிலில் தமிழ் முறையில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஏரிவாக்கம் காந்தி நகரில் உள்ள பழைமை வாய்ந்த முத்துமாரியம்மன் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு கோசைநகரான் சிவனடியார் திருக்கூடத்தை சேர்ந்த சிவனடியார்களால் தமிழில் வேத மந்திரங்கள் ஓதி  கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 9 யாக சாலைகள் அமைக்கப்பட்டு திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. பிள்ளையார் வழிபாடு, திருமகள் வழிபாடு,காப்பு அணிவித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மூல பரம்பொருளுக்கு முத்தமிழால் முதல் கால வேள்வி பூஜை, இரண்டாம் கால வேள்வி பூஜை, தெய்வத் தமிழால் மூன்றாம் கால வேள்வி பூஜை,  மூல திருமேனிகளுக்கு எண் வகை மருந்து சாத்துதல் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தமிழில் வேதமந்திரங்கள் முழங்க திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அரோகரா, அரோகரா என பக்தி கோஷமிட்டு சுவாமியை வழிபாடு செய்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் ஏரிவாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சக்திவேல் மற்றும் விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Tamil ,Muthumariyamman ,
× RELATED தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு