×

ஹார்டுவேர் கடையில் தீவிபத்து

சென்னை: புழல் ஜிஎன்டி சாலையில் அம்பேத்கர் சிலை அருகே, சம்பத் ராம் என்பவருக்கு சொந்தமான ஹார்டுவேர் கடை உள்ளது. இவர், கடந்த 7ம் தேதி கடையை மூடிவிட்டு, குடும்பத்துடன் சொந்த ஊரான ராஜஸ்தான் சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் இவரது கடையில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, கடை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஆனால், அதற்குள் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால், பக்கத்து கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து சம்பத் ராமுக்கு தகவல் கொடுக்கபட்டதை தொடர்ந்து, அவர் சென்னைக்கு வந்து கொண்டு இருக்கிறார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Tags : hardware store ,
× RELATED ஹார்டுவேர்ஸ் கடையில் ரூ.1.8 லட்சம் கொள்ளை