×

கச்சபேஸ்வரர் மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம்

குன்றத்தூர்,மே 10: புகழ்பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு தமிழகத்தில் மழை பெய்து, பூமி செழிக்க வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. சென்னை புறநகர் பகுதிகளில் மிகவும் புகழ் பெற்றதும், பக்தர்களால் மிகவும் சக்திவாய்ந்த தாகவும் கருதப்படும் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழாவான நேற்று, காலை ஐந்து மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னர் காமாட்சி அம்மன் மற்றும் கோயில் சந்நிதியில் அமைந்துள்ள  ஆதிசங்கரர் சன்னதிக்கு திருமுறை இசை,

நாதஸ்வர இசை முழங்க அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றது. பின்னர் காலை ஒன்பது மணிக்கு, கோயில் வளாகத்தில், மழை பெய்து பூமி செழிக்க வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.  இந்த யாகத்தில் சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் துணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி மற்றும் கோயில் பரம்பரை தர்மகர்த்தா மணலி சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்டனர்.

Tags : Shiva ,Kachapasevar Mangad Kamatchi Amman Temple ,
× RELATED குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முன்னோர்கள் ஆசி கிடைக்க என்ன வழி?