×

(ஆந்திரா செய்தி எண்.01) பக்தர்களிடம் அதிக விலைக்கு லட்டு விற்பனை சென்னை வாலிபர் உட்பட 5 பேர் கைது

திருமலை, மே 10: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களிடம் அதிக விலைக்கு லட்டு விற்ற சென்னை வாலிபர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் சலுகை விலையிலும், வெளிமார்க்கெட் விலையிலும் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த லட்டு பிரசாதம் உலகளவில் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த லட்டுகளை அங்குள்ள ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் முறைகேடாக விற்பனை செய்வதாக தொடர் புகார்கள் உள்ளது. இதை தடுக்க தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் லட்டு வழங்கும் கவுன்டர் அருகே 4வது செக்டார் விஜிலன்ஸ் அதிகாரி வீரபாபு, இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பக்தர்களுக்கு அதிக விலைக்கு லட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்த 41 லட்டுகள், 6 டோக்கன்கள் ₹650 ஆகியவற்றை அதிகரிகள் பறிமுதல் செய்து, 5 பேரையும் முதலாவது நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடாவை சேர்ந்த பனிந்திரா, குண்டூர் னிவாஸ், கிழக்கு கோதாவரி மாவட்டம் நாகேஸ்வரலு, அனந்தப்பூர் மாவட்டம் குத்தியை சேர்ந்த ராமாஞ்சநேயலு, சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சிலம்பரசன் என தெரிந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Andhra News ,
× RELATED (ஆந்திரா செய்தி எண்.05) கிரிக்கெட்...