×

திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறையை திறக்க கோரிக்கை

திருக்கோவிலூர், மே 9: திருக்கோவிலூர் பேரூராட்சி சார்பில், விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலையத்தில் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தில் வியாபாரிகள் கடை நடத்துவதற்கு கடைகள் மட்டுமல்லாது போக்குவரத்து கழக அலுவலகம், புறக்காவல் நிலையம், பாலூட்டும் தாய்மார்கள் என மூன்று கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கடைகளை தவிர்த்து போக்குவரத்து கழக நேரக் கட்டுப்பாட்டு அலுவலகம், புறக்காவல் நிலையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. ஆனால் பாலூட்டும் தாய்மார்கள் அறை மட்டும் இன்னும் திறக்கப்படாமலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமலும் உள்ளது. மேலும் இந்த அறையும், வணிக வளாகத்தின் மாடிப்படியும் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளது. ஏற்கனவே இந்த வணிக வளாகத்தில் பயணிகள் வந்து செல்லும் அளவிற்கும், மழைக்கும், நிழலுக்கும் ஒதுங்க கூட இடமில்லாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் சூழப்பட்டுள்ளது.

அதோடு பாலூட்டும் தாய்மார்கள் அறையும், மாடிப்படியும் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளதால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக கைக்குழந்தையுடன் பஸ் நிலையத்திற்கு வரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பசியாற்ற போதிய இடமில்லாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த வணிக வளாகத்தில் தாய்மார்களுக்கு என தனியாக எதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டார்களோ அதனை அவர்கள் பயன்பாட்டிற்கு நிறைவேற்றவில்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பஸ் நிலைய வணிக வளாகத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறையையும், மாடிப்படியையும் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mothers ,nurses ,room ,Tirukovilur ,
× RELATED கர்ப்பிணி தாய்மார்கள் வெயிலில் வெளியே செல்வதை தவிருங்கள்