×

திருட்டு மணல் லாரி பறிமுதல்

விழுப்புரம், மே 9:  விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் உட்கோட்ட பகுதியில் இருந்து இரவு நேரங்களில் சென்னை போன்ற பகுதிகளுக்கு லாரி மூலம் மணல் திருடப்பட்டு செல்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருட்டு மணல் கடத்தி செல்வதாக வந்த தகவலின்பேரில் விழுப்புரம் டிஎஸ்பி திருமால் தலைமையிலான தாலுகா போலீசார் எல்லீஸ்சத்திரம் புறவழிச்சாலையில் நின்றுகொண்டு திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அதிவேமாக உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் இருந்து திருட்டு மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.

அந்த லாரியை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டியுள்ளனர். ஆனால் டிஎஸ்பியை கண்டதும் லாரி நிற்காமல் வேகமாக சென்றது. கட்டுப்பாட்டை இழந்து நீண்ட தூரம் தாறுமாறாக சென்ற லாரியை போலீசார் துரத்திச்சென்றபோது, டிரைவர் லாரியை பள்ளத்தில் நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், விழுப்புரம் அருகே திருப்பாச்சாவடிமேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(30) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.


Tags : Theft ,
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது