×

உலக சாதனை புரிந்த மாணவனுக்கு பாராட்டு விழா




சாயல்குடி, மே 9: உலக சாதனை புரிந்த மாணவனுக்கு சாயல்குடி அருகே சிக்கல் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.சாயல்குடி அருகே சிக்கல் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஷேக் முகம்மதுராஷித். இவர் சைக்கிள் சக்கரத்தை தலையில் வைத்து சுற்றி 56 வினாடிகளில் 100 படிகளை கடந்து, உலக சாதனை புரிந்தார்.மாணவருக்கு அவர் கல்வி பயின்ற சிக்கல் இந்தியன் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் முகம்மதுரபீக் தலைமை வகித்தார். மாணவருக்கு பள்ளியின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர் விரும்பும் சாதனைக்கு தேவையான உதவிகளை பள்ளி நிர்வாகம் செய்யும் என தாளாளர் தெரிவித்தார்.

Tags : world record holder ,
× RELATED சுமார் 2.35 மணி நேரம் பனிக்கட்டிகள்...