×

வைக்கோலுக்கு வைத்த தீயால் வாழை,தென்னை எரிந்து நாசம்

சோழவந்தான், மே 9: சோழவந்தானில் நெல் அறுவடைக்கு பின் வயலில் கிடந்த வைக்கோலுக்கு வைத்த தீயால் தென்னை மற்றும் வாழைகள் எரிந்து கருகியது. சோழவந்தான் வடகரைகண்மாய் பகுதியில் நெல் விளைந்து தற்போது அறுவடைப் பணிகள் நடந்து வருகிறது. அறுவடைக்கு பின் விவசாயிகள் வயலிலே விட்டு சென்ற வைக்கோல்  கோடை வெயிலுக்கு காய்ந்திருந்த நிலையில், வைக்கோலுக்கு யாரே மர்ம நபர் தீ வைத்துள்ளார். இந்த தீ மளமள பரவி, மொட்டையன் பாலம், பிரிவு பாசன கால்வாய்க்கு அடுத்திருந்த விவசாயி பாலமுருகன் வாழை தோட்டத்தில் தீப்பிடித்தது.

இதனால் காய் வெட்டும் பருவத்திலிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வாழை தாருடன்   தீயில் எரிந்து கருகியது. மேலும் அருகிலிருந்த தென்னை மரகன்றுகளும், நாணல் புற்களும்   தீயில் எரிந்தது. சோழவந்தான் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். தீயால் சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள வாழை தென்னைகள் தீயில் எரிந்து சேதமானது என விவசாயிகள் கவலையோடு தெரிவித்தனர்.Tags :
× RELATED டெல்டா மாவட்டங்களில் சூறாவளி...