×

நான்கு வழி சாலைக்கு நிலம் அளவீடு அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

இடைப்பாடி, மே 9:  இடைப்பாடி அருகே, அம்மன்காட்டூரில் நான்குவழி சாலைக்கு கூடுதல் நிலம் அளவீடு செய்யபடுவதாக கூறி, அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை அருகே அம்மன்காட்டூரில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், ஓமலூர்சங்ககிரி நான்கு வழி சாலைக்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அளவிடும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, சுங்கச்சாவடி அமைக்க அதிகளவில் அளவீடு செய்வதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அதிகாரிகளை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில், கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனைத்து பகுதிகளிலும் உள்ளது போல் தான் இங்கும் அளவீடு செய்யப்படுகிறது. சுங்கச்சாவடி ஏதும் அமைக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தியதின்பேரில் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Tags : land scam officers ,road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...