×

ஜலகண்டாபுரத்தில் கொப்பரை தேங்காய் ₹14 லட்சத்திற்கு ஏலம்

ஜலகண்டாபுரம், மே 9: ஜலகண்டாபுரத்தில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை தேங்காய் ₹14 லட்சத்திற்கு ஏலம் போனது. சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஜலகண்டாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 300 மூட்டை கொப்பரை தேங்காயை விற்பனைக்காக கொண்டு வந்தனர். முதல் தரம் அதிகபட்சமாக ₹90.45 வரையும், குறைந்தபட்சம் கிலோ ₹74.40 வரையும், இரண்டாம் தரம் குறைந்தபட்சம் கிலோ ₹46.70 வரையும், அதிகபட்சமாக ₹58.80 வரையிலும் ஏலம் போனது. மொத்தமாக, 300 மூட்டை ₹14 லட்சத்திற்கு ஏலம் நடந்தது.

Tags : Jalakandapuram ,
× RELATED வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சுத்திணறி பலி