×

கல்லக்குடி-முதுவத்தூர் வரை பல்லாங்குழியாக மாறிய தார்சாலை வாகனங்கள் தடுமாற்றம்

லால்குடி, மே 9:  லால்குடி அருகே கல்லக்குடி-முதுவத்தூர் செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் தடுமாறி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. லால்குடியை அடுத்த கல்லக்குடியிலிருந்து முதுவத்தூர் வழியாக சன்னாவூர், வெங்கனூர், விளாகம், முடிகண்டம் வழியாக திருமானூர், தஞ்சை செல்ல இந்த தார் சாலையை பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கல்லக்குடியிலிருந்து வெங்கனூர்-சன்னாவூர் வரை செல்லும் இணைப்பு தார் சாலை கடந்த 2001 ஆண்டில் அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் பேருந்துகள் செல்ல முடியாத நிலையும். இருசக்கர வாகனத்தில் செல்வோர் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தடுமாறி செல்லும் இந்த வாகனங்களால் தொடர்ந்து விபத்து நடைபெறுவதை தடுக்க உடனடியாக தார் சாலை அமைக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Kallukudi-Muduvathur ,
× RELATED தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள்,...