×

பிளஸ்1 தேர்வு முடிவு வெளியீடு தஞ்சை மாவட்டம் 95.85 சதவீதம் தேர்ச்சி மாநில அளவில் 17வது இடம்

தஞ்சை, மே 9: பிளஸ்1 தேர்வு முடிவில் தஞ்சை மாவட்டம் 95.85 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தஞ்சை மாவட்டம் மாநில அளவில் 17வது  இடத்தை பிடித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று பிளஸ் 1 தேர்வு முடிவுகளை முதன்மை கல்வி அலுவலர் சாந்தா வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் 223 பள்ளிகளில் இருந்து 12,098 மாணவர்கள், 15,288 மாணவிகள் என்று மொத்தம் 27,386 பேர் தேர்வெழுதினர். இதில் 11,378 மாணவர்கள், 14,872 மாணவிகள் என்று 26,250 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95.85 சதவீத தேர்ச்சியாகும். பிளஸ்1 தேர்வில் மாநில அளவில் தஞ்சை மாவட்டம் 17வது இடம் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு மாநில அளவில் 21 இடத்தை பெற்று 90.29 சதவீதம் பெற்றிருந்தது. ஆதிதிராவிட நலப்பள்ளி 83.42 சதவீதமும், மாநகராட்சி பள்ளி 80 சதவீதமும், அரசு பள்ளி 93.23 சதவீதமும், முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளி 96.19 சதவீதமும், பகுதியாக அரசு உதவி பெறும் பள்ளி 98.14 சதவீதமும், சமூக நலப்பள்ளி 77.50 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது. அறிவியல் பாடப்பிரிவில் 93.9 சதவீதமும், வணிகவியல் பாடப்பிரிவில் 97.4 சதவீதமும், கலைப்பிரிவில் 95.1 சதவீதமும், தொழிற்பாடப்பிரிவில் 92.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார்.

Tags : state ,Thanjavur district ,
× RELATED கலெக்டர் அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் துவக்கம்