×

எஸ்டிபிஐ, பிஎப்ஐ அமைப்பை தடை செய்யகோரி ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சி முடிவு

கும்பகோணம், மே 9: கும்பகோணம் ஆர்டிஓ வீராச்சாமியிடம் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொது செயலாளர் குருமூர்த்தி மனு அளித்தார். அதில் திருபுவனம் முன்னாள் பாமக நிர்வாகி ராமலிங்கம், மதமாற்றத்தை தட்டி கேட்டதால் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். காவல்துறை விசாரணை மேற்கொண்டு 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாகியுள்ளனர். தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையை சீர்குலைக்கும் விதமாகவும், மத கலவரத்தை தூண்டும் விதமாகவும் எஸ்டிபிஐ அமைப்பினர் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். எனவே எஸ்டிபிஐ மற்றும் பிஎப்ஐ போன்ற பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தி வரும் 13ம் தேதி ஊர்வலமாக சென்று கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அனுமதி வழங்காவிட்டாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Hindu People's Party Demonstration ,BFI ,SDPI ,
× RELATED மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க SDPI கட்சி முடிவு