×

காளியம்மன் கோயிலில் திருநடன திருவிழா

பாபநாசம், மே 9: பாபநாசம்  அடுத்த கபிஸ்தலம் சுந்தர காளியம்மன் கோயிலில் திருநடன திருவிழா நடந்தது.  இதையொட்டி கடந்த 30ம் தேதி முதல் 4 நாட்கள் அம்மனின் திருநடன நிகழ்ச்சி  நடந்தது. கடந்த 5ம் தேதி பால்குட திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள்  பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கும்பாபிஷேகம்:  கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று  நடந்தது. இதையொட்டி கடந்த 6ம் தேதி முதற்கால யாக பூஜை, நேற்று முன்தினம்  காலை இரண்டாம் கால யாகபூஜை, மூன்றாம் கால யாகபூஜை நடந்தது.

நேற்று காலை  நான்காம் கால யாகபூஜை நடந்தது. பின்னர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கோயில்  திருவிழா: பாபநாசம் அடுத்த மட்டையாந்திடல் வடுவுச்சியம்மன் கோயில்  திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று பொய்கை ஆற்றிலிருந்து ஏராளமான  பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  மாலையில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள்  பங்கேற்றனர்.

Tags : Thirunada ,festival ,Kaliamman temple ,
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா