×

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வில் மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளி சாதனை

புதுக்கோட்டை, மே 9: மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளி சிபிஎஸ்சி. பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
மாணவர் முகமதுவசீம் 481 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடமும் வெங்கடாஜலபதி 477மதிப்பெண் பெற்ற மூன்றாம் இடமும், கல்கிசெல்வன் 475 மதிப்பெண் பெற்று நான்காம் இடமும், சிபிசக்கரவர்த்தி  474 மதிப்பெண் பெற்று ஐந்தாம் இடமும், அமிர்தா 473 மதிப்பெண் பெற்ற 6ம் இடமும் பிடித்து சாதனை  படைத்தனர்.

மாணவர்களும், அவரது பெற்றோர்களும், மாணவர்களை ஊக்கப்படுத்தி நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற செய்த பள்ளிக்குப் பாராட்டுத் தெரிவித்தனர். இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர். மேலும், பள்ளியின் இயக்குநர் டாக்டர். ஜோனத்தன். இணை இயக்குநர் ஏஞ்சலின் ஜோனத்தன் மற்றும் முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Tags : CBSE 10th Class Examination of Mount Zion International School ,
× RELATED பாடாலூரில் சித்ரா பவுர்ணமியை...