×

பணம் எடுக்க சென்றவருக்கு உதவி செய்வது போல் நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி நூதன திருட்டு

பொன்னமராவதி, மே 9: பொன்னமராவதி அருகே ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றவருக்கு உதவுவதுபோல் நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து ரூ.5,800 எடுத்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில்  ஸ்டேட் பேங்க் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் நல்லூரை சேர்ந்த முருகையா என்பவர் தனது மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5,000 எடுக்க சென்றார். அப்போது ஏடிஎம்மில் அருகில் இருந்த ஒருவர் உதவி செய்வதுபோல் நடித்து அவரிடமிருந்த ஏடிஎம் கார்டை ஐ வாங்கி கொண்டு வேறு ஒரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த மர்மநபர், முருகையா மனைவியின் ஏடிஎம் அக்கவுண்டில் இருந்த ரூ.5,800 எடுத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொன்னமராவதி காவல் நிலையத்தில் முருகையா புகார் செய்தார். போலீசார் வழக்கப்பதிந்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

Tags : Nominee robbery ,assistant ,
× RELATED மேலூர் அருகே ஏடிஎம் கார்டை மாற்றி பெண்ணிடம் திருட்டு