×

உலக ரெட்கிராஸ் தினம் கொண்டாட்டம்

பெரம்பலூர், மே 9: பெரம்பலூரில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பாக  உலக ரெட்கிராஸ்தினம் கொண்டாடப்பட்டது. 109 முறை ரத்ததானம் அளித்த ஜெயராமனுக்கு குருதிக் கொடைவள்ளல் பட்டம் வழங்கப்பட்டது. பெரம்பலூர்  மாவட்ட கிளை, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் உலக ரெட்கிராஸ்  தினம், பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று  கொண்டாடப்பட்டது. மாவட்ட ஐஆர்சிஎஸ் கிளையின் கவுரவ தலைவர்  வரதராஜன் தலைமை வகித்து ரெட்கிராஸ் சொசைட்டியின் சேவைகள் குறித்தும், அனாதை குழந்தைகள் பராமரிப்பின் அவசியம் குறித்தும் விரிவாக  எடுத்துக் கூறினார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியை சேர்ந்த 80 ஆயுட்கால உறுப்பினர்கள்  விழாவில் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டக் கிளை ஐஆர்சிஎஸ் கவுரவ  துணைத் தலைவர் டாக்டர் தங்கராஜ், சித்த மருத்துவர் கோசிபா, பள்ளித்  தலைமை ஆசிரியர் செல்வராஜ், ஐஆர்சிஎஸ் மாவட்ட கிளையின் இணைச் செயலாளர்  சூசைராஜ், செயற்குழு உறுப்பினர் சின்னம்மாள் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட அளவில்  109முறை ரத்ததானம் அளித்த ஜெயராமனுக்கும், 56 முறை ரத்ததானம் அளித்த ராஜேந்திரனுக்கும், 14 முறை ரத்ததானம் அளித்த கங்காதரனுக்கும் குருதிக்  கொடை வள்ளல்கள் என்ற பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

நல மையம் துவக்கம்: அரியலூர் அரசு கலைக்கல்லூரியில்  உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு அரசு கலைக்கல்லூரியின் யூத் ரெட்கிராஸ் சார்பில் புதிதாக நல மையம் துவக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் பழனிசாமி தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கியபோது, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், உடல் நலத்தை பாதுகாக்கும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பற்றி கூறினார்.

அரியலூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி துணைத் தலைவர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரெட்கிராஸின் தோற்றம் மற்றும் செயல்பாடுகள் மற்றும் மனிதநேய பணிகள் பற்றிவிளக்கிக் கூறினார். நிகழ்ச்சியில் நல மையத்தின் சார்பில் கல்லூரியில் உள்ள அனைத்து துறைகளுக்கும் முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டது. இதில் பேராசிரியர்கள் ஜெயகுமார், அருள், நெல்சன், ராஜமூர்த்தி, பாலசுப்பிரமணியம், செல்வமணி, இளையராஜா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்.

Tags : World Ridgro Day Celebration ,
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...