×

கொள்ளிடம் அருகே அரசு கான்கிரீட் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் காயம்

கொள்ளிடம், மே 9: கொள்ளிடம் அருகே அரசு கான்கிரீட் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் படுகாயம் அடைந்தார். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் ஊராட்சி வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(38). கூலித்தொழிலாளி. திருமணமாகாத இவர் தனது தாயுடன் 20 ஆண்டுகளுக்கு முன் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார். ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விட்டதால் மேற்கூரை மட்டும் கீற்றால் வேயப்பட்டு, அதே வீட்டில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து தூங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி மீது விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : house ,state ,cobble ,
× RELATED கண்ணாடி மாளிகை மீண்டும் திறப்பு: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு