×

மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் துண்டிப்பு தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் அறிவிப்பு

கீழக்கரை, மே 9: ஏர்வாடி தர்ஹா அருகில் உள்ள சின்ன ஏர்வாடியில் கடந்த 15 நாட்களுக்கு முன் கடற்கரையில் வீசிய வேகமான பலத்த காற்றால் இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்து இப்பகுதியில் குடியிருக்கும் 20க்கும் மேற்பட்ட மினவர்கள் வீடுகளிலும், அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பெருமாள் கோயிலிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து தெரு விளக்குகளும் எரியாமல் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து மின்வாரியத்திற்கு பலமுறை நேரில் சென்றும், கைபேசி மூலமாகவும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குளாகி வருகின்றனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மீனவர் குமார் கூறுகையில், ‘சின்ன ஏர்வாடி மீனவர்கள் குடியிருப்பு பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன் வீசிய வேகமான காற்றில் இரண்டு மின்கம்பங்கள் சாய்து இப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊர் முழுவதும் இருள்சூழ்ந்து இருப்பதால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இரவில் வெளியில் வருவதற்கு முடியாமலும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டில் இருக்க முடியாமலும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மின்கம்பங்களை சரிசெய்து இப்பகுதிக்கு மின்சப்ளை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்

Tags : Collector ,announcement ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...