×

கரிசல்பட்டியில் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி கிடையாது கலெக்டர் அறிவிப்பு

சிவகங்கை, மே 9: சிங்கம்புணரி அருகே, கரிசல்பட்டியில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில், மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரினர். இது தொடர்பாக, தேவகோட்டை ஆர்டிஓ அப்பகுதியை ஆய்வு மேற்கொண்டார். இதில், மஞ்சு விரட்டுக்கு அனுமதி கோரிய பகுதி, குடியிருப்பு நிறைந்த பகுதியாகவும், எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கிராமத்தில் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாவட்ட எஸ்பியும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு மஞ்சுவிரட்டு நடத்த ஆட்சேபனை தெரிவித்துள்ளார். எனவே, கரிசல்பட்டி கிராமத்தில் நாளை (மே 10) மஞ்சுவிரட்டு நடத்த அரசால் அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை.

தேவகோட்டை ஆர்டிஓ, திருப்பத்தூர் டிஎஸ்பி மற்றும் சிங்கம்புணரி தாசில்தார் ஆகியோர் முன்னேச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு, நாளை மஞ்சுவிரட்டு நடைபெறாத வண்ணம் கண்காணித்து சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் தடையை மீறி பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத குடியிருப்பு பகுதியில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தினால், கிராம மஞ்சுவிரட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் விழா குழுவினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அனுமதி பெறாத இடத்திற்கு மஞ்சுவிரட்டு மாடுகளை அழைத்து வருபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags : Collector ,tailrace ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...