×

கரூர் நகராட்சி பகுதிகளில் புதிதாக தார் சாலை போடாமல் பேட்ஜ்ஒர்க் செய்வதால் மக்கள் அவதி

கரூர், மே 9: கரூர் நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் சாலை புதிதாக போடாமல் பேட்ஜ் ஒர்க் மட்டும் செய்துள்ளதால் மக்கள் விரக்தியில் உள்ளனர்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, ராமானூர், கொளந்தானூர், வெங்கமேடு போன்ற பல பகுதிகளில் உள்ள தெருச்சாலைகள் அனைத்தும் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்த சாலைகளுக்கு பதிலாக புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்திருந்தனர். இதனடிப்படையில், பல்வேறு தெருச்சாலைகள் பழுதடைந்த பகுதிகள் மட்டும் பெயர்க்கப்பட்டு, ஜல்லிக்கற்கள், சிமெண்ட் கலவை வைத்து போட்டு பேட்ஜ் ஒர்க் மட்டும் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக தார்ச்சாலைகள் அமைத்து தருவார்கள் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், பழுதடைந்த பகுதிகள் மட்டும் பூசப்பட்டுள்ளது. தாந்தோணிமலை, ராமானூர் பகுதிகளை சுற்றிலும் ஏராளமான தெருச்சாலைகள் இதுபோல பூச்சு போடப்பட்டுள்ளது. இந்த பூச்சுகள் சில மாதங்கள் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும், திரும்பவும் பழுதடைந்து விடும் என்பதால், புதிதாக தார்ச்சாலைகள் அமைக்க வேண்டும் என  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : areas ,Karur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்