×

காளையார்கோவில் பஸ்நிலையத்தில் ஹைமாஸ் விளக்கு ‘அவுட்’ பயணிகளை அச்சுறுத்தும் இருட்டும்; திருட்டும்

காளையார்கோவில், மே 9: காளையார்கோவில் பஸ்நிலையத்தில் ஹைமாஸ் விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து, பயணிகள் திருட்டு அச்சத்தில் செல்கின்றனர்.
மதுரை-தொண்டி மாநில நெடுஞ்சாலையில் காளையர்கோவில் பஸ்நிலையம்  உள்ளது. இந்த பஸ்நிலையத்திற்கு 200க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர். இந்த பஸ்நிலையம் அருகே, சில ஆண்டுகளுக்கு முன் உயர்கோபுர மின்விளக்கு (ஹைமாஸ் விளக்கு) அமைக்கப்படது.

கடந்த சில மாதங்களாக ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் பஸ்நிலையத்தில் இரவு நேரங்களில் இருள்சூழ்கிறது. இதனால், பஸ்நிலைய பகுதியில் திருட்டு,  வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன. ஹைமாஸ் விளக்குகளை சீரமைக்கக்கோரி, சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், போலீசார் ரோந்துப் பணிக்கு வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, பஸ்நிலையத்தில் ஹைமாஸ் விளக்குகளை எரிய வைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : lantern ,Himalayan ,bus station ,bus stand ,Kalayyorko ,
× RELATED பாஜகவின் இமலாய பொய்கள் சரிந்துவிட்டன: தேஜஸ்வி