×

மழை பெய்ய வேண்டி சிறப்பு வருண ஜெப யாகம்

ராமேஸ்வரம், மே. 9:  ராமேஸ்வரம் கோயில் குளத்தில் நேற்று மழை வேண்டி சிறப்பு வருணஜப யாகம் நடைபெற்றது. தமிழகத்தில் எதிர்பார்த்த அளவிற்கு கடந்த ஆண்டு மழை பெய்யாததால் பல பகுதிகளில் மக்களின் குடிநீர் தேவையைக்கூட பூர்த்த செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ராமேஸ்வரம் தீவுப்பகுதியிலும் போதிய மழை பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர்மட்டும் குறைந்துள்ளது. வீட்டு கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில் காவரி குடிநீர் மட்டுமே உள்ளூர் மக்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்நிலை தொடர்வதால் தண்ணீர் வறட்சியை போக்கிடவும், மழை பெய்ய வேண்டியும் தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு யாகம் நடத்திட தமிழக அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மழை வேண்டி வர்ணஜப யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


இதையொட்டி நேற்று கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சேதுமாதவ தீர்த்த வளாகத்தில் உதயகுமார் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்களால் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து குளத்திற்குள் இறங்கி மந்திரங்கள் முழங்க வர்ணஜபம் செய்யப்பட்டது. யாகத்தில் வைக்கப்பட்டு கலச நீர் குளத்தில் ஊற்றப்பட்டபின் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீரால் நந்தி சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கோயில் மேலாளர் முருகேசன், கண்காணிப்பாளர் ககாரின்ராஜ், பேஷ்கார் அண்ணாதுரை, கண்ணன், செல்லம், கமலநாதன் உட்பட கோயில் ஊழியர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம்...