×

இலக்கிய மன்ற கூட்டம்

திருப்பூர்,மே 9: தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்ற கூட்டம் பி.கே.ஆர்.இல்லத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் நடராஜன் தலைமை தாங்கி கார்ல் மார்க்ஸ் பிறந்த தின சிறப்புரையாற்றினார். தொடர்ந்து எழுத்தாளர் ராமன் முள்ளிப்பள்ளம் பேசுகையில்: இன்று டிஜிட்டல் சிந்தனைகள் மனித மூளையை மழுங்கடிப்பதாக உள்ளது. இளைய தலைமுறையினர் செல்போன், தொலைக்காட்சி கேளிக்கைகளில் மூழ்கிக் கிடக்கின்றனர்.  சமூக பொறுப்புணர்வுகளைத் தரும் அநீதியோடு சமரசம் செய்யாத எழுச்சிமிகு உணர்வுகளைத் தரும் நல்ல இலக்கியம் உருவாக்கப்படுவதும், அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பதும் பெரிய சவாலாக உள்ளது.

 சுதந்திரப் போராட்ட காலத்தில் பாரதியார்கவிதை மக்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்கியது. சமூக விழிப்புணர்வின் மூலம் வரும் அரசியல் தலையீடு இளைஞர்கள் மத்தியில் வளர வேண்டும். இதுவே புதிய, நல்ல இலக்கியங்களுக்கு வழிவகுக்கும் என்றார். முன்னதாக ராமன் முள்ளிப்பள்ளம் எழுதிய அம்மா தொட்டில் என்ற நாவல், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் எழுதிய மூன்று நதிகள் சிறுகதைத் தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் சண்முகம், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...