×

உலக செஞ்சிலுவை தினம் அனுசரிப்பு

திருப்பூர்,மே9: செஞ்சிலுவைச் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் உலக செஞ்சிலுவை தினம் அனுசரிக்கப்பட்டது. உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருப்பூர் கிளை சார்பில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் செஞ்சிலுவை தினம் கொண்டாடப்பட்டது. செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய, ஹென்றி டியூனாண்ட் படத்துக்கு மலர் தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்க சேர்மென் சண்முக வடிவேல் தலைமை வகித்தார். இணைச்செயலாளர் தாமோதரன் வரவேற்றார். சங்க பொருளாளர் சுப்பிரமணியம், பசுமை ராமசாமி, ஞானவேல் ஆகியோர் செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் ஹென்றி டொனால்டு செய்த சேவைகளைப் பாராட்டி பேசினர். தொடர்து சிறப்பாக பணிபுரிந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ரமேசுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர் சிவா, சங்கர் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : World Red Cross ,
× RELATED தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்)