×

அமராவதி அணை செல்லும் படிக்கட்டு அடைப்பு

உடுமலை,மே9: அமராவதி அணையை பார்வையிட செல்லும் படிக்கட்டுக்களில் முட்களை வெட்டிப்போட்டு தடுத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அணையின் மேல்பகுதிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை,அமராவதி அணை ஆகிய இரு அணைகளும் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக திகழ்ந்து வருகிறது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன்  அணையை சுற்றிப் பார்க்க வந்து செல்கின்றனர்.

 அமராவதி அணையில் படகு சவாரி அணை அருகே பூங்கா மற்றும் முதலை பண்ணை என்பதை காணும் ஆர்வத்துடன் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. அணைக்குள் நுழையும் பொது பொதுமக்களிடம் இருந்து நபர் ஒருவருக்கு ரூ.5 கட்டணமாக பொதுப்பணித்துறை சார்பில் வசூலிக்கப்பட்டாலும் அணையை சுற்றி பார்க்க செல்லும் வழியானது முட்களை வெட்டி போட்டு அடைக்கப்பட்டுள்ளது. அணையின் கீழே உள்ள பூங்கா புதர் மண்டி ஆட்கள் உள்ளே நுழைய முடியாதபடி விஷ ஜந்துகள் நடமாடும் பகுதியாக உள்ளது. அணையில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதால் படகு சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது. இது தவிர அணைக்கு மேலே சென்று அணையின் பாயிண்ட் ஆப் வியூ பார்க்க செல்ல முடியாதபடி படிக்கட்டுகளை பொதுப்பணித்துறை ஊழியர்கள் முட்களை வெட்டி போட்டுள்ளனர். இதனால் அணையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அணை அருகே வசிக்கின்ற மீனவர்கள் மாலையில் மீன் பிடிக்க சென்று விட்டு காலையில் தான் திரும்புபவர். இவர்கள் கூட தற்போது அணைக்கு படிக்கட்டு வழியே செல்ல முடியாது சுற்றி செல்ல வேண்டிய நிலையே நீடிக்கிறது.

Tags : Amravati Dam ,
× RELATED அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 6,500 கனஅடி நீர்திறப்பு..!!