×

திருச்சூர் பூரம் திருவிழா

பாலக்காடு, மே9:  கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா மே13ம் தேதி துவங்குகிறது. விழாவையொட்டி திருச்சூரிலுள்ள பாரமேற்காவு மற்றும் திருவம்பாடி ஆகிய கோயில்களில் கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதைத்தொடர்ந்து பாரமேற்காவின் முன்பாக அலங்கரித்த 5 யானைகள் மீது அம்மன் செண்டைவாத்யம் முழங்க வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சூர் பூரம் விழா நாளன்று பாரமேற்காவு அம்மன் கோவிலிலிருந்து பஞ்சவாத்ய இசைகளுடன் அலங்கரித்த 15 யானைகள் மீது அம்மன் வீதியுலா புறப்பட்டு வடக்குநாதர்கோவில் வளாகத்தில் செண்டை வாத்யம் நடக்கிறது. தொடர்ந்து வடக்குநாதர் கோயில் தெற்குகோபுர வாயிலின் முன்பாக தேக்கின்க்காடு மைதானத்தில் பாரமேற்காவு - திருவம்பாடி கோயில்களின் யானைகள் அணிதிரண்டு வண்ண முத்துமணிக்குடைமாற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.  இந்த வண்ண குடைமாற்ற நிகழ்ச்சியை பார்க்க தேக்கின்காடு மைதானத்தில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடைமாற்றம் நிகழ்ச்சிக்கு தேவையான வண்ணமுத்துமணி குடைகள் தயாரிக்கும் பணியில் தற்போது தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : Thrissur Pooram ,festival ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...