×

விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான நேர்முகத் தேர்வு

ஊட்டி, மே 9:  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான தேர்வு நேற்று ஊட்டியில் நடந்தது.
 தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு விடுதிகள் நடத்தப்படுகிறது. இந்த விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டுக்கள் மற்றும் தடகள பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 7ம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வு நேற்று ஊட்டியில் நடந்தது. நீலகிரி மாவட்டத்ைத ேசர்ந்த ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்துக் கொண்டனர். ஊட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த நேர்முகத் தேர்வு மாவட்ட விளையாட்டு அலுவலர் சேதுராஜன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்கியுள்ள விதிகளின்படி, மாணவர்கள் நேர்முகத் தேர்வு நடந்தது.

இதில், தேர்ச்சி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான நேர்முகத் தேர்விற்கு அனுப்பப்படுவார்கள். அங்கு தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகள் மட்டுமே விளையாட்டு விடுதிகளில் சேர்க்கப்படுவார்கள். இந்த நேர்முகத் தேர்வில் நேற்று நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 107 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், மாணவிகள் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
மற்ற அனைவரும் மாணவர்களே. கால்பந்து, வாலிபால், கைப்பந்து, டேக்வாண்டா, குத்துச்சண்டை, கூடைப்பந்து மற்றும் இறகுப் பந்து உட்பட பல்வேறு விளையாட்டுகள் மற்றும் தடகள பயிற்சிகள் இந்த விளையாட்டு விடுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு அளிக்கப்படும். மேலும், சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதற்காகவும், ஊக்குவிப்பதற்காகவே அரசு விளையாட்டு விடுதிகளை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Homes ,Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...