×

மஞ்சூரில் முப்பெரும் விழா

மஞ்சூர், மே 9: மலையக மக்கள் முன்னேற்ற அறக்கட்டளையின் சார்பில் மஞ்சூரில் முப்பெரும் விழா நடந்தது.  நீலகிரி மாவட்ட மலையக மக்கள் முன்னேற்ற அறக்கட்டளையின் 14ம் ஆண்டு விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தாயகம் திரும்பியோருக்கு ரெப்கோ வங்கி மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் 10, 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு என முப்பெரும் விழா மஞ்சூர் எச்.கே.டிரஸ்ட் கட்டிடத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
 விழாவிற்கு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மதிவாணன் தலைமை தாங்கினார். சேரனுார் ஊர்தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

அறக்கட்டளை அறங்காவலர் சண்முகலிங்கம் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி வீரபாலச்சந்திரன், திண்டுக்கல் அறக்கட்டளை திட்ட இயக்குனர் காசிமாயன், ஆசிரியர் செல்வகோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கல்வியின் சிறப்பு, சுற்றுச்சூழலின் அவசியம், சமுதாய முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, சமூக ஒற்றுமை மற்றும் ரெப்கோ வங்கி மூலம் தாயகம் திரும்பியோருக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்கள். விழாவில் மஞ்சூர் சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த மலையக மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். முடிவில் அறங்காவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags : festival ,Manchur ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...