×

காயமடைந்த மயிலுக்கு சிகிச்சை

கோவை, மே 9: கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் நாயக்கன்பாளையம் பகுதிக்குட்பட்ட காளம்பாளையம் பகுதியில் மதியழகன் என்பவரின் தோட்டத்தில் அதிகளவில் மயில்கள் வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று தோட்டத்தில் காயமடைந்த மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நடக்க முடியாமல் ஒரு ஆண் மயில் கிடந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மயிலை மீட்டு வண்ணாங்கோவில் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மயிலுக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார். சிகிச்சைக்கு பின் மயில் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மயில் முழுமையாக குணமடைந்தவுடன் வனத்திற்குள் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Tags :
× RELATED ராஜபாளையத்தில் மழையால் நிரம்பியது...