×

ஊத்துக்கோட்டை சுற்றுப்புறத்தில் சூறைக்காற்றில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஊத்துக்கோட்டை, மே 9: ஊத்துக்கோட்டை, அதன் சுற்றுப்புறத்தில் நேற்று லேசான மழையுடன் சூறைக்காற்று வீசியது. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது. எதிர்பார்த்தபடி பலத்த மழை பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர் ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள  தாராட்சி தொம்பரம்பேடு, சீத்தஞ்சேரி ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் இருந்து பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன்பிறகு மேக மூட்டங்கள் காணப்பட்டது. பின்னர் பிற்பகல் 3 மணிக்கு திடீரென சூறைகாற்றுடன் மழை பெய்தது. இதில் தாராட்சி பகுதியில் தனியாருக்கு சொந்தமான  மீன் குட்டை அருகே மின்கம்பம் சாய்ந்தது, ஊத்துக்கோட்டை  - திருவள்ளூர் சாலையில் சீத்தஞ்சேரி  சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் சாய்ந்தது.

இதையறிந்த ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் பென்னலூர்பேட்டை போலீசார் மற்றும் சீத்தஞ்சேரி பகுதி மக்கள் சாலையில் விழுந்த மரங்களை அகற்றினர்.  இதனால் மின்தடை ஏற்பட்டடு   4 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. விவசாயிகள் கூறுகையில்,தற்போது காற்றுடன் பெய்த மழையால் எந்த பலனும் இல்லை, ஏனென்றால் ஒரு மணி நேரம் மட்டுமே மிதமாக பெய்தது வந்த மழை கூட காற்று மூலம் சென்றுவிட்டது, இன்னும் 2 மணி நேரம் கூடுதலாக பெய்திருந்தால் நிலத்தடி நீர் உயர்ந்து குடிநீர் பிரச்னை இல்லாமல் இருந்திருக்கும் என்றனர்.

Tags : neighborhood ,Udukkottai ,
× RELATED அந்தியூரில் காற்றுடன் கனமழை 25 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதம்