மறைமலைநகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 20 குடிசைகள் அகற்றம்

செங்கல்பட்டு, மே 9: மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட மல்ரோசாபுரம் மலையடிவார பகுதியில் சிலர் குடிசை அமைத்து வசித்து வந்தனர். இந்நிலையில், அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக செங்கல்பட்டு வருவாய்த் துறை சார்பில் ேநற்று அந்த பகுதிக்கு, துணை தாசில்தார் பூங்கொடி, ஆர்ஐ திலகவதி, கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் போலீஸ் பாதுகாப்புடன் சென்று இந்த குடிசைகளை அகற்ற வந்தனர்.

இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பல வருடங்களாக இங்கு குடியிருந்து வருவதாகவும், எங்களுக்கு மாற்று இடம் இல்லை எனவும் தெரிவித்தனர். பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி போலீசார் முன்னிலையில், பொக்லைன் எந்திரம் மூலம் 20 குடிசைகள் அகற்றப்பட்டது. இதனால் அங்கு பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாற்று இடம் வழங்கவேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : suburbs ,
× RELATED மின்வயர் அறுந்து விழுந்து குடிசைகள் சாம்பல்