×

மருத்துவரின் பெயரை கூறி நூதன முறையில் நகைகள் கொள்ளை

காஞ்சிபுரம், மே 9: காஞ்சிபுரத்தில் பாஜக கட்சியின் நகர துணைத்தலைவர் மோகன்லால் (52) என்பவர் செங்கழுநீரோடை வீதியில் நகைக்கடை வைத்துள்ளார். அவரிடம் பிரபல தனியார் மருத்துவமனையிலிருந்து  நேற்று முன்தினம் மருத்துவர் பேசுவதாக கூறி மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். அப்போது, தனக்கு தங்க சங்கிலி வேண்டும்.  அறுவை சிகிச்சை பணிக்கு செல்லும் முன் மருத்துவமனைக்கு வந்து  காட்டுமாறு மர்ம நபர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மோகன்லால் தன் மகன் தினேஷ்குமார் (37) மூலம் 5 க்கும் மேற்பட்ட தங்க சங்கிலியை கொடுத்து அனுப்பியுள்ளார். தங்க சங்கிலியுடன் மருத்துவமனைக்கு தினேஷ்குமார் சென்றபோது  மருத்துவமனை வாசலில் நின்ற மர்ம நபர், மருத்துவர் அறுவை சிகிச்சை பணியில் உள்ளதாகவும் தன்னிடம் நகைகளை கொடுத்தால் காட்டி விட்டு மீதியை கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். இதை நம்பிய தினேஷ்குமார்  நகைகளை கொடுத்துவிட்டு காத்திருந்துள்ளார்.

உள்ளே சென்ற மர்ம நபர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் மருத்துவரை அணுகி கேட்டபோது தான் அதுபோன்று எதுவும் போன் செய்யவில்லை எனக்கூறியதும் தினேஷ்குமார்  அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து சிவ காஞ்சி காவல்நிலையத்தில் தினேஷ்குமார் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிவகாஞ்சி போலீசார், இந்த நூதன முறை கொள்ளை குறித்து காஞ்சிபுரம் டிஎஸ்பி பாலசுப்ரமணியன், சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 4 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : robbery ,doctor ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...