தட்கல் முறையில் பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுக்கு இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம், மே 9: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019   தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மே 3 முதல் 8ம் தேதி வரை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் எழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) முறையில் அரசின் சேவை மையங்களில் இன்றும் (மே 9) மற்றும் நாளை (மே 10) ஆகிய தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: